search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் தாக்குதல்"

    காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை, சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மணிகண்டனை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை வெட்டியது செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன், ஜெகன்ராஜ், மதியழகன் ஆகியோர் என்பது தெரிந்தது.

    அவர்கள் 6 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.

    போரூர் போலீஸ் நிலையம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியரை கத்தியால் வெட்டி, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். #ATM #MoneyRobbery
    பூந்தமல்லி:

    சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி(30) ஆகியோர் இந்த ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப காரில் வந்தனர்.

    மொத்தம் ரூ.14 லட்சம் வைத்து இருந்தனர். அதில் ரூ.4 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைக்காமல், திறந்து இருந்த நிலையிலேயே வைத்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் மீதம் ரூ.10 லட்சம் இருந்தது.

    அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். இருவரும் தலையில் ஹெல்மெட்டும், கை உறையும் அணிந்து இருந்தனர். ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருக்க, மற்றொருவர் மட்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, தேவராஜ் கையில் ரூ.10 லட்சம் இருந்த பெட்டியை தரும்படி கேட்டார்.

    காயம் அடைந்த தேவராஜ்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், முரளி இருவரும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தேவராஜூக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அதில், தேவராஜ், முரளி இருவரும் நேற்று மதியம் முதல் ரூ.35 லட்சம் பணத்துடன் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பினர். பின்னர் கடைசியாக ரூ.14 லட்சம் பணத்துடன் இரவு 8.30 மணியளவில்தான் நூம்பல் பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை நிரப்பினர்.

    கொள்ளையர்கள் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்து, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் தேவராஜ், முரளி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகிலேயே போரூர் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #ATM #MoneyRobbery
     
    நிலக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையை சேர்ந்தவர் சவுந்தரம்(வயது45). இவருக்கும் அக்ரஹாரப்பட்டியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பெட்ரோல் பங்கில் சவுந்தரம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சக்திவேல், அஜித்குமார், வினித்குமார், அர்ஜூனன், முருகன், அழகுராஜா ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்பு தகாதவார்த்தைகளால் திட்டி சவுந்திரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சுங்க சாவடி ஊழியரை தாக்கிய அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் மங்களமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் ஏற்பட்டது.

    பெரம்பலூர்:

    சென்னை அரசு கேபிள் டி.வி. மேலாண் இயக்குகுநர் குமரகுருபாரன். இவர் நேற்று இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்த போது பெரம்பலூர் அருகேயுள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தகவல் அறிந்து பெரம்பலூர் மாவட்ட கேபிள் டி.வி. வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வரு வாய்த்துறை ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, அப்போது வருவாய் துறையினருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

    அப்போது காசிநாதன் என்ற சுங்க சாவடி ஊழியரை பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட காசிநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே சுங்க சாவடி ஊழியரை தாக்கிய வருவாய் அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் மங்களமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் திருமாந்துறை சுங்கச்சாவடியில் அதிகாலை வரை சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டன. இன்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறியதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று அதிகாலை பணிக்கு திரும்பினர்.

    ×